அக்டோபர் 17 : நற்செய்தி வாசகம்
வெள்ளி, 16 அக்டோபர், 2026
அக்டோபர் 17 : நற்செய்தி வாசகம் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12
அக்டோபர் 17 : பதிலுரைப் பாடல் திபா 8: 1-2a. 3-4. 5-6 (பல்லவி: 6a) பல்லவி: உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்
அக்டோபர் 17 : பதிலுரைப் பாடல்
அக்டோபர் 17 : முதல் வாசகம் கிறிஸ்துவைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-23
அக்டோபர் 17 : முதல் வாசகம்
October 17th : Gospel A reading from the Holy Gospel according to St.Luke 12: 8–12
October 17th : Gospel
October 17th : Responsorial Psalm Psalm 8:2–3a, 4–5, 6–7 (R. see 7a) Response : You have given your Son power over the works of your hands.
October 17th : Responsorial Psalm
October 17th : First Reading A reading from the letter of St.Paul to the Ephesians 1:15–23
October 17th : First Reading
வியாழன், 15 அக்டோபர், 2026
அக்டோபர் 16 : நற்செய்தி வாசகம் உங்கள் தலைமுடி எல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கின்றன. ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-7 அக்காலத்தில் ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது: “பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும். என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.” ஆண்டவரின் அருள்வாக்கு.
அக்டோபர் 16 : நற்செய்தி வாசகம்
அக்டோபர் 16 : பதிலுரைப் பாடல் திபா 33: 1-2. 4-5. 12-13 (பல்லவி: 12b) பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
அக்டோபர் 16 : பதிலுரைப் பாடல்
அக்டோபர் 16 : முதல் வாசகம் கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டோம். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 11-14
அக்டோபர் 16 : முதல் வாசகம்
October 16th : Gospel A reading from the Holy Gospel according to St.Luke 12: 1–7
October 16th : Gospel
October 16th : Responsorial Psalm Psalm 33:1–2, 4–5, 12–13 (R. 12b)
October 16th : Responsorial Psalm
First Reading A reading from the letter of St.Paul to the Ephesians 1:11–14
First Reading
புதன், 14 அக்டோபர், 2026
அக்டோபர் 15 : நற்செய்தி வாசகம் ஆபேலின் இரத்தம் முதல் சக்கரியாவின் இரத்தம் வரை, இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகக் கணக்குக் கேட்கப்படும். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 47-54
அக்டோபர் 15 : நற்செய்தி வாசகம்
அக்டோபர் 15 : பதிலுரைப் பாடல் திபா 98: 1. 2-3a. 3b-4. 5-6 (பல்லவி: 2a) பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார். 1
அக்டோபர் 15 : பதிலுரைப் பாடல்
அக்டோபர் 15 : முதல் வாசகம் உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-10
அக்டோபர் 15 : முதல் வாசகம்
October 15th : Gospel A reading from the Holy Gospel according to St.Luke 11: 47–54
October 15th : Gospel
October 15th : Responsorial Psalm Psalm 98:1, 2–3ab, 3cd–4, 5–6 (R. 2a) Response : The Lord has made known his salvation.
October 15th : Responsorial Psalm
October 15th : First Reading A reading from the letter of St.Paul to the Ephesians 1: 1–10
October 15th : First Reading
செவ்வாய், 13 அக்டோபர், 2026
நற்செய்தி வாசகம் பரிசேயரே உங்களுக்குக் கேடு! ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 42-46
நற்செய்தி வாசகம்
பரிசேயரே உங்களுக்குக் கேடு! ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு!
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 42-46
அக்காலத்தில் இயேசு கூறியது:
“ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டுவிடலாகாது.
ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள் போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்."
திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவு படுத்துகிறீர்” என்றார்.
அதற்கு அவர், “ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: யோவா 8: 12a) பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 27அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
பொதுக்காலம் 28ஆம் வாரம் - புதன் முதல் வாசகம் கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 18-25
14 அக்டோபர் 2026, புதன்
பொதுக்காலம் 28ஆம் வாரம் - புதன்
முதல் வாசகம்
கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 18-25
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.
ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன்.
ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவை உள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவு உணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்து விட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
October 14th : Gospel A reading from the Holy Gospel according to St.Luke 11: 42–46
October 14th : Gospel
October 14th : Responsorial Psalm Psalm 1:1–2, 3, 4 and 6 (R. see John 8:12) Response : Whoever follows you, Lord, will have the light of life.
October 14th : Responsorial Psalm
October 14th : First Reading A reading from the letter of St.Paul to the Galatians 5:18–25
October 14th : First Reading











