பிப்ரவரி 19 : பதிலுரைப் பாடல்
திபா 12: 1-2a. 3-4. 6-7 (பல்லவி: 7a)
பல்லவி: ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்.
1
ஆண்டவரே, காத்தருளும்; ஏனெனில் உலகில் இறையன்பர்கள் அற்றுப் போயினர்; மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.
2a
ஒருவர் அடுத்திருப்பாரிடம் பொய் பேசுகின்றனர். - பல்லவி
3
தேனொழுகும் இதழால் இருமனத்தோடு பேசுகின்றனர். தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும் ஆண்டவரே, துண்டித்துவிடுவீராக! பெருமையடித்துக்கொள்ளும் நாவை அறுத்துவிடுவீராக!
4
‘எங்கள் நாவன்மை எங்கள் வலிமை; எங்கள் பேச்சுத் திறனே எங்கள் பக்கத் துணை; எங்களுக்குத் தலைவர் வேறு யார்?’ என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக! - பல்லவி
6
ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்; மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை; ஏழுமுறை புடமிடப்பட்டவை.
7
ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்; இத்தகைய தலைமுறையிடமிருந்து எம்மை என்றும் காப்பாற்றும். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 9: 7
அல்லேலூயா, அல்லேலூயா!
மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அல்லேலூயா.
No comments:
Post a Comment