மே 24 : பதிலுரைப் பாடல்
திபா 68: 28-29. 32-34a. 34b-35c (பல்லவி: 32a)
பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்.
அல்லது: அல்லேலூயா.
28
கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்!
29
எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர். - பல்லவி
32
உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
33
வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின் மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில், முழங்குகின்றார்.
34a
கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள். - பல்லவி
34b
அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது.
35c
கடவுள் போற்றி! போற்றி! - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 17: 17b, a
அல்லேலூயா, அல்லேலூயா!
ஆண்டவரே உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
No comments:
Post a Comment