Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, July 12, 2023

ஜூலை 13 : முதல் வாசகம்உயிர்களைக் காக்கும் பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 44: 18-21, 23-29; 45: 1-5

ஜூலை 13 :  முதல் வாசகம்

உயிர்களைக் காக்கும் பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 44: 18-21, 23-29; 45: 1-5

அந்நாள்களில்

யூதா, யோசேப்பு அருகில் வந்து, “என் தலைவரே! அடியேன் ஒரு வார்த்தை கூற அனுமதி தாரும். என் தலைவரே! செவிசாய்த்தருளும். உம் அடியான் மீது சினம் கொள்ள வேண்டாம். நீர் பார்வோனுக்கு இணையானவர். என் தலைவராகிய தாங்கள் உம் பணியாளர்களாகிய எங்களிடம், ‘உங்களுக்குத் தந்தையோ சகோதரனோ உண்டா?’ என்று கேட்டீர்கள். அதற்கு நாங்கள், ‘எங்களுக்கு வயது முதிர்ந்த தந்தையும், முதிர்ந்த வயதில் அவருக்குப் பிறந்த ஓர் இளைய சகோதரனும் உள்ளனர். அவனுடைய சகோதரன் இறந்துவிட்டான். அவன் தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே இருப்பதால், தந்தை அவன் மேல் அதிக அன்புகொண்டிருக்கிறார்” என்று தலைவராகிய தங்களுக்குச் சொன்னோம். அப்பொழுது தாங்கள், ‘அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அவனை நேரில் பார்க்க வேண்டும்’ என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள். அதற்குத் தாங்கள் ‘உங்கள் இளைய சகோதரன் உங்களோடு வராவிட்டால் என் முகத்தில் விழிக்க வேண்டாம்’ என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.

உம் பணியாளராகிய எங்கள் தந்தையிடம் திரும்பியவுடன் என் தலைவராகிய தாங்கள் சொல்லியவற்றை அவரிடம் எடுத்துரைத்தோம். பிறகு எங்கள் தந்தை, ‘நீங்கள் திரும்பிப்போய் நமக்குக் கொஞ்சம் உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்’ என்றார். நாங்கள் ‘எங்களால், போக இயலாது, எங்கள் இளைய சகோதரன் எங்களோடு சேர்ந்து வந்தால் மட்டுமே புறப்படுவோம். வராவிட்டால், இவன் இல்லாமல் நாங்கள் அவர் முகத்தில் விழிக்க மாட்டோம்’ என்றோம். உம் பணியாளராகிய எங்கள் தந்தை எங்களிடம் ‘என் மனைவி, எனக்கு இரு பிள்ளைகளையே பெற்றெடுத்தாள் என்று உங்களுக்குத் தெரியும். ஒருவன் என்னைப் பிரிந்து வெளியே சென்றான். அவன் ஒரு கொடிய விலங்கால் பீறிக் கிழிக்கப்பட்டான் என்று நினைத்துக்கொண்டேன். ஏனெனில், இதுவரை அவனைக் காணவில்லை. இப்பொழுது நீங்கள் இவனையும் என்னிடமிருந்து பிரிக்கிறீர்கள். இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்வீர்கள்’ என்றார்.

அப்பொழுது யோசேப்பு தம் பணியாளர் அனைவர் முன்னிலையிலும் இதற்குமேல் தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல், ‘எல்லாரும் என்னைவிட்டு வெளியே போங்கள்’ என்று உரத்த குரலில் சொன்னார். யோசேப்பு தம் சகோதரருக்குத் தம்மைத் தெரியப்படுத்தும்பொழுது வேற்று மனிதர் எவரும் அவரோடு இல்லை. உடனே அவர் கூக்குரலிட்டு அழுதார். எகிப்தியர் அதைக் கேட்டனர். பார்வோன் வீட்டாரும் அதைப் பற்றிக் கேள்விப்பட்டனர்.

பின்பு, அவர் தம் சகோதரர்களை நோக்கி, “நான்தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறாரா?” என்று கேட்டார். ஆனால் அவரைப் பார்த்து அவர் சகோதரர்கள் திகில் அடைந்ததால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் யோசேப்பு தம் சகோதரர்களை நோக்கி, “என் அருகில் வாருங்கள்” என்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் அவர், “நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்! நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ளவேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும் பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment