Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, July 26, 2023

ஜூலை 27 : முதல் வாசகம்மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கி வருவார்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 9-11, 16-20

ஜூலை 27 :  முதல் வாசகம்

மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கி வருவார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 9-11, 16-20
அந்நாள்களில்

எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த மூன்றாம் மாதம் முதல் நாளில் இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலை நிலத்தைச் சென்றடைந்தனர். இரபிதீமிலிருந்து பயணம் மேற்கொண்ட அவர்கள் சீனாய் பாலை நிலத்தை வந்தடைந்து, பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர். அங்கே மலைக்கு முன்பாக இஸ்ரயேலர் பாளையம் இறங்கினர்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ! நான் உன்னோடு பேசுவதை மக்கள் கேட்கும்படியும் என்றென்றும் உன்னை நம்பும்படியும் நான் கார்மேகத்தில் உன்னிடம் வருவேன்” என்றார்.

மோசேயும் மக்களின் வார்த்தைகளை ஆண்டவருக்கு அறிவித்தார். ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ மக்களிடம் போய் அவர்களை இன்றும் நாளையும் தூய்மைப்படுத்து. அவர்கள் தம் துணிகளைத் துவைத்துக் கொள்ளட்டும். இவ்வாறு மூன்றாம் நாளுக்காகத் தயாராகட்டும். ஏனெனில், மூன்றாம் நாள் மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கி வருவார்” என்றார்.

மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரிடி முழங்கியது. மின்னல் வெட்டியது. மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது. எக்காளப் பேரொலி எழுந்தது. இதனால் பாளையத்திலிருந்த அனைவரும் நடுநடுங்கினர். கடவுளைச் சந்திப்பதற்காக மோசே மக்களைப் பாளையத்திலிருந்து வெளிவரச் செய்தார். அவர்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றார்கள். சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது. ஏனெனில் ஆண்டவர் அதன்மீது நெருப்பில் இறங்கி வந்தார். அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. எக்காள முழக்கம் எழும்பி, வர வர மிகுதியாயிற்று.

மோசே பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார். ஆண்டவர் சீனாய் மலைமேல் மலையுச்சியில் இறங்கி வந்தார். அப்போது ஆண்டவர் மோசேயை மலையுச்சிக்கு அழைக்க, மோசே மேலே ஏறிச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment