Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, September 29, 2025

30 செப்டம்பர் 2025, செவ்வாய் பொதுக்காலம் 26ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள். இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23

 30 செப்டம்பர் 2025, செவ்வாய்

பொதுக்காலம் 26ஆம் வாரம் - செவ்வாய்

முதல் வாசகம்


வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.


இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23



படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களுள் பல நகர்களில் குடியிருப்போரும் கூட வருவார்கள். ஒரு நகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, “நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்” என்று சொல்வார்கள். மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.


படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப் பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருக்கின்றார்’ என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்.”


ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment