இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 27 நவம்பர், 2020

பதிலுரைப் பாடல்*திபா 95: 1-2. 3-5. 6-7 *பல்லவி: மாரனாத்தா! ஆண்டவராகிய இயேசுவே, வாரும்

*🌿பதிலுரைப் பாடல்*

திபா 95: 1-2. 3-5. 6-7 

*பல்லவி: மாரனாத்தா! ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.*
1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;
புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி 

3 ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்;
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.
4 பூவுலகின் ஆழ் பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன;
மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.
5 கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்;
உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. -பல்லவி 

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்;
நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.
7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;
நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். -பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

_அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா._

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக