மே 31 : நற்செய்தி வாசகம்
சனி, 30 மே, 2026
மே 31 : நற்செய்தி வாசகம் உலகை மீட்கவே கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பினார். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-18
மே 31 : இரண்டாம் வாசகம் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-13
மே 31 : இரண்டாம் வாசகம்
இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-13
சகோதரர் சகோதரிகளே,
இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது: மகிழ்ச்சியாய் இருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திவெ 1: 8 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா!
இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.
மே 31 : பதிலுரைப் பாடல் தானி (இ) 1: 29ac. 30,31. 32,33 (பல்லவி: 29b)
மே 31 : பதிலுரைப் பாடல்
தானி (இ) 1: 29ac. 30,31. 32,33 (பல்லவி: 29b)
பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.
29a
எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக;
29c
மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. - பல்லவி
30
உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக;
31
கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி
32
உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக;
33
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி
மே 31 : மூவொரு கடவுள் பெருவிழா முதல் வாசகம் இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 34: 4b-6, 8-9
மே 31 : மூவொரு கடவுள் பெருவிழா
May 31st : Gospel God sent his Son so that through him the world might be saved A Reading from the Holy Gospel according to St.John 3:16-18
May 31st : Gospel
May 31st : Second Reading The grace of Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 13:11-14
May 31st : Second Reading
May 31st : Responsorial Psalm Daniel 3:52, 53, 54, 55, 56 (R. see 52b) Response : You are to be praised and highly exalted forever!
May 31st : Responsorial Psalm
May 31st : First Reading 'Lord, Lord, a God of tenderness and compassion' A Reading from the Book of Exodus 34:4-6,8-9
May 31st : First Reading