இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 26 மார்ச், 2026

மார்ச் 27 : நற்செய்தி வாசகம் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 31-42

 மார்ச் 27 : நற்செய்தி வாசகம்

இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 31-42


அக்காலத்தில்

இயேசுவின் மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள்முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். யூதர்கள் மறுமொழியாக, “நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்” என்றார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, “ ‘நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்’ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறைமகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்பவேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” என்றார். இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார். யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், “யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று” எனப் பேசிக்கொண்டனர். அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 27 : பதிலுரைப் பாடல் திபா 18: 1-2a,3. 4-5. 6 (பல்லவி: 6a)

 மார்ச் 27 :  பதிலுரைப் பாடல்

திபா 18: 1-2a,3. 4-5. 6 (பல்லவி: 6a)


பல்லவி: என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்.

1

அவர் உரைத்தது: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.

2a

ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்;

3

போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். - பல்லவி

4

சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.

5

பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன. - பல்லவி

6

என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 6: 63b, 68b

ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வும் அளிக்கின்றன.

மார்ச் 27 : முதல் வாசகம் ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13

 மார்ச் 27 :  முதல் வாசகம்

ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13


அந்நாள்களில்

எரேமியா கூறியது: ‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள்; ‘பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்’ என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்!’ என்கிறார்கள்.

ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது. படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 27th : Gospel They wanted to stone Jesus, but he eluded them A Reading from the Holy Gospel according to St.John 10: 31-42

 March 27th :  Gospel  

They wanted to stone Jesus, but he eluded them

A Reading from the Holy Gospel according to St.John 10: 31-42

At that time: The Jews picked up stones again to stone Jesus. Jesus answered them, “I have shown you many good works from the Father; for which of them are you going to stone me?” The Jews answered him, “It is not for a good work that we are going to stone you but for blasphemy, because you, being a man, make yourself God.” Jesus answered them, “Is it not written in your Law, ‘I said, you are gods’? If he called them gods to whom the word of God came and Scripture cannot be broken— do you say of him whom the Father consecrated and sent into the world, ‘You are blaspheming’, because I said, ‘I am the Son of God’? If I am not doing the works of my Father, then do not believe me; but if I do them, even though you do not believe me, believe the works, that you may know and understand that the Father is in me and I am in the Father.” Again they sought to arrest him, but he escaped from their hands. He went away again across the Jordan to the place where John had been baptizing at first, and there he remained. And many came to him. And they said, “John did no sign, but everything that John said about this man was true.” And many believed in him there.

The Gospel of the Lord.

March 27th : First reading He has delivered the soul of the needy from the hands of evil men A Reading from the Book of the Prophet Jeremiah 20:10-13

 March 27th :  First reading 

He has delivered the soul of the needy from the hands of evil men

A Reading from the Book of the Prophet Jeremiah 20:10-13

I hear many whispering. Terror is on every side! “Denounce him! Let us denounce him!” say all my close friends, watching for my fall. “Perhaps he will be deceived; then we can overcome him and take our revenge on him.” But the Lord is with me as a dread warrior; therefore my persecutors will stumble; they will not overcome me. They will be greatly shamed, for they will not succeed. Their eternal dishonour will never be forgotten. O Lord of hosts, who tests the righteous, who sees the heart and the mind, let me see your vengeance upon them, for to you have I committed my cause. Sing to the Lord; praise the Lord! For he has delivered the life of the needy from the hand of evildoers.

The Word of the Lord.

March 27th : Responsorial Psalm Psalm 18:2–3a, 3bc–4, 5–6, 7 (R. see 7) Response : In my anguish I called to the Lord, and he heard me.

 March 27th : Responsorial Psalm

Psalm 18:2–3a, 3bc–4, 5–6, 7 (R. see 7)

Response : In my anguish I called to the Lord, and he heard me.

I love you, Lord, my strength; O Lord, my rock, my fortress, my saviour. 

R.: In my anguish I called to the Lord, and he heard me.

My God, my rock where I take refuge; my shield, my saving strength, my stronghold. I cry out, “Praised be the Lord!” and see, I am saved from my foes. 

R.: In my anguish I called to the Lord, and he heard me.

The waves of death rose about me; the torrents of destruction assailed me; the snares of the grave surrounded me; the traps of death confronted me. 

R.: In my anguish I called to the Lord, and he heard me.

In my anguish I called to the Lord; I cried to my God for help. From his temple he heard my voice; my cry to him reached his ears. 

R.: In my anguish I called to the Lord, and he heard me.

Verse before the Gospel

V. Glory and praise to you, O Christ.

R. Glory and praise to you, O Christ.

V. Your words, Lord, are spirit and life, you have the words of eternal life.

R. Glory and praise to you, O Christ.