இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 30 செப்டம்பர், 2020

October 1st : Responsorial PsalmPsalm 26(27):7-9,13-14

October 1st : Responsorial Psalm

Psalm 26(27):7-9,13-14 

I am sure I shall see the Lord’s goodness in the land of the living.
O Lord, hear my voice when I call;
  have mercy and answer.
Of you my heart has spoken:
  ‘Seek his face.’

I am sure I shall see the Lord’s goodness in the land of the living.

It is your face, O Lord, that I seek;
  hide not your face.
Dismiss not your servant in anger;
  you have been my help.

I am sure I shall see the Lord’s goodness in the land of the living.

I am sure I shall see the Lord’s goodness
  in the land of the living.
Hope in him, hold firm and take heart.
  Hope in the Lord!

I am sure I shall see the Lord’s goodness in the land of the living.

Gospel Acclamation Mt4:4

Alleluia, alleluia!
Man does not live on bread alone,
but on every word that comes from the mouth of God.
Alleluia!

October 1st : First Reading My Avenger lives and will set me close to him when I awakeA Reading from the Book of Job 19:21-27

October 1st : First Reading 

My Avenger lives and will set me close to him when I awake

A Reading from the Book of Job 19:21-27 
Job said:
Pity me, pity me, you, my friends,
  for the hand of God has struck me.
Why do you hound me down like God,
  will you never have enough of my flesh?
Ah, would that these words of mine were written down,
  inscribed on some monument
with iron chisel and engraving tool,
  cut into the rock for ever.
This I know: that my Avenger lives,
  and he, the Last, will take his stand on earth.
After my awaking, he will set me close to him,
  and from my flesh I shall look on God.
He whom I shall see will take my part:
  these eyes will gaze on him and find him not aloof.

The Word of the Lord.

அக்டோபர் 1 : நற்செய்தி வாசகம்நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

அக்டோபர் 1 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

அக்காலத்தில்
இயேசு வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.

வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, ‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள்.

அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 1 : பதிலுரைப் பாடல்திபா 27: 7-8a. 8b-9abc. 13-14 . (பல்லவி: 13)

அக்டோபர் 1 :  பதிலுரைப் பாடல்

திபா 27: 7-8a. 8b-9abc. 13-14 . (பல்லவி: 13)
பல்லவி: வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.

7.ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.
8a.‘புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம். - பல்லவி

8b.ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.
9abc.உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும். - பல்லவி

13.வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14.நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

அக்டோபர் 1 : முதல் வாசகம்என் மீட்பர் வாழ்கின்றார்; இறுதியில் மண்மேல் எழுவார்.யோபு நூலிலிருந்து வாசகம் 19: 21-27

அக்டோபர் 1 : முதல் வாசகம்

என் மீட்பர் வாழ்கின்றார்; இறுதியில் மண்மேல் எழுவார்.

யோபு நூலிலிருந்து வாசகம் 19: 21-27

யோபு கூறியது:
என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்காள்! என்மேல் இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது. இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்? என் சதையை நீங்கள் குதறியது போதாதா? ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது வரையப்படலாகாதா? ஓ! அவை ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா? இரும்புக் கருவியாலும் ஈயத்தாலும் என்றென்றும் அவை பாறையில் பொறிக்கப்பட வேண்டும்.

ஏனெனில், என் மீட்பர் வாழ்கின்றார் என்றும், இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன். என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும்போதே கடவுளைக் காண்பேன். நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

(அக்டோபர் 01). பொதுக்காலம் இருபத்து ஆறாம் வாரம்வியாழக்கிழமை

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

September 30th : Gospel'I will follow you wherever you go'A Reading from the Holy Gospel according to St. Luke 9:57-62

September 30th :  Gospel

'I will follow you wherever you go'

A Reading from the Holy Gospel according to St. Luke 9:57-62 

As Jesus and his disciples travelled along they met a man on the road who said to him, ‘I will follow you wherever you go.’ Jesus answered, ‘Foxes have holes and the birds of the air have nests, but the Son of Man has nowhere to lay his head.’
  Another to whom he said, ‘Follow me’, replied, ‘Let me go and bury my father first.’ But he answered, ‘Leave the dead to bury their dead; your duty is to go and spread the news of the kingdom of God.’
  Another said, ‘I will follow you, sir, but first let me go and say goodbye to my people at home.’ Jesus said to him, ‘Once the hand is laid on the plough, no one who looks back is fit for the kingdom of God.’

The Gospel of the Lord.

September 30th : Responsorial PsalmPsalm 87(88):10-15 Let my prayer come into your presence, O Lord.

September 30th :  Responsorial Psalm

Psalm 87(88):10-15 

Let my prayer come into your presence, O Lord.
I call to you, Lord, all the day long;
  to you I stretch out my hands.
Will you work your wonders for the dead?
  Will the shades stand and praise you?

Let my prayer come into your presence, O Lord.

Will your love be told in the grave
  or your faithfulness among the dead?
Will your wonders be known in the dark
  or your justice in the land of oblivion?

Let my prayer come into your presence, O Lord.

As for me, Lord, I call to you for help:
  in the morning my prayer comes before you.
Lord, why do you reject me?
  Why do you hide your face?

Let my prayer come into your presence, O Lord.

Gospel Acclamation Ps118:105

Alleluia, alleluia!
Your word is a lamp for my steps
and a light for my path.
Alleluia!

September 30th : First ReadingHow can man be in the right against God?A Reading from the Book of Job 9:1-13,14-16.

September 30th :  First Reading

How can man be in the right against God?

A Reading from the Book of Job 9:1-13,14-16.
Job spoke to his friends:
Indeed, I know it is as you say:
  how can man be in the right against God?
If any were so rash as to challenge him for reasons,
  one in a thousand would be more than they could answer.
His heart is wise, and his strength is great:
  who then can successfully defy him?
He moves the mountains, though they do not know it;
  he throws them down when he is angry.
He shakes the earth, and moves it from its place,
  making all its pillars tremble.
The sun, at his command, forbears to rise,
  and on the stars he sets a seal.
He and no other stretched out the skies,
  and trampled the Sea’s tall waves.
The Bear, Orion too, are of his making,
  the Pleiades and the Mansions of the South.
His works are great, beyond all reckoning,
  his marvels, past all counting.
Were he to pass me, I should not see him,
  nor detect his stealthy movement.
Were he to snatch a prize, who could prevent him,
  or dare to say, ‘What are you doing?’
How dare I plead my cause, then,
  or choose arguments against him?
Suppose I am in the right, what use is my defence?
  For he whom I must sue is judge as well.
If he deigned to answer my citation,
  could I be sure that he would listen to my voice?

The Word of the Lord.

செப்டம்பர் 30 : நற்செய்தி வாசகம்நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62

செப்டம்பர் 30 :  நற்செய்தி வாசகம்

நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62
அக்காலத்தில்

இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.

இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றி வாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.

வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.