இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 24 நவம்பர், 2020

_You will be hated universally on account of my name, but not a hair of your head will be lost._*A reading from the Holy Gospel according to St Luke 21:12-19*

*GOSPEL*

_You will be hated universally on account of my name, but not a hair of your head will be lost._

*A reading from the Holy Gospel according to St Luke 21:12-19* 
'But before all this happens, you will be seized and persecuted; you will be handed over to the synagogues and to imprisonment, and brought before kings and governors for the sake of my name  and that will be your opportunity to bear witness. 
Make up your minds not to prepare your defence,  because I myself shall give you an eloquence and a wisdom that none of your opponents will be able to resist or contradict. You will be betrayed even by parents and brothers, relations and friends; and some of you will be put to death. You will be hated universally on account of my name, but not a hair of your head will be lost. Your perseverance will win you your lives.

*The Gospel of the Lord*

I believe in God, /...

_Response: Almighty, your deeds are wonderful_*Psalms 98:1, 2-3, 7-8, 9*

*𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response: Almighty, your deeds are wonderful_

*Psalms 98:1, 2-3, 7-8, 9*

1 [Psalm] Sing a new song to Yahweh, for he has performed wonders, his saving power is in his right hand and his holy arm. 
2 Yahweh has made known his saving power, revealed his saving justice for the nations to see, 

3 mindful of his faithful love and his constancy to the House of Israel. The whole wide world has seen the saving power of our God. 

7 Let the sea thunder, and all that it holds, the world and all who live in it. 

8 Let the rivers clap their hands, and the mountains shout for joy together, 

9 at Yahweh's approach, for he is coming to judge the earth; he will judge the world with saving justice and the nations with fairness.


____ 

🌿Before the gospel
  
𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔, 𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔!  Be confident until you die.  Then I will make life as good as yours, says the Lord.
𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔. 

FIRST READING*_and they were singing the hymn of Moses, the servant of God, and the hymn of the Lamb:_*A reading from the Book of Revelation 15:1-4*

_🍁Daily Reading for Wednesday November 25, 2020_

*FIRST READING*

_and they were singing the hymn of Moses, the servant of God, and the hymn of the Lamb:_

*A reading from the Book of Revelation 15:1-4*
And I saw in heaven another sign, great and wonderful: seven angels were bringing the seven plagues that are the last of all, because they exhaust the anger of God. 
I seemed to be looking at a sea of crystal suffused with fire, and standing by the lake of glass, those who had fought against the beast and won, and against his statue and the number which is his name. They all had harps from God, 
 and they were singing the hymn of Moses, the servant of God, and the hymn of the Lamb: How great and wonderful are all your works, Lord God Almighty; upright and true are all your ways, King of nations. 
Who does not revere and glorify your name, O Lord? For you alone are holy, and all nations will come and adore you for the many acts of saving justice you have shown. 

*The Word of the Lord*

நற்செய்தி வாசகம்* _என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது._ *✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19*

*நற்செய்தி வாசகம்* 

_என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது._ 

*✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19* 

அக்காலத்தில் 
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. 

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.” 

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்* *திபா 98: 1. 2-3ab. 7-8. 9 . (பல்லவி: திவெ 15: 3b)* _பல்லவி: எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் வியப்புக்குரியன._

*பதிலுரைப் பாடல்* 

*திபா 98: 1. 2-3ab. 7-8. 9 . (பல்லவி: திவெ 15: 3b)* 

_பல்லவி: எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் வியப்புக்குரியன._ 
1 ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி 

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். - பல்லவி 

7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். - பல்லவி 

9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி 

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி* 

*திவெ 2: 10* 

_அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா._

பொதுக்காலம் 34ஆம் வாரம் – புதன் 25/11/2020* *முதல் வாசகம்* _கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக்கொண்டிருந்தார்கள்._ *திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4*

*பொதுக்காலம் 34ஆம் வாரம் – புதன் 25/11/2020* 

*முதல் வாசகம்* 

_கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக்கொண்டிருந்தார்கள்._ 

*திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4* 

சகோதரர் சகோதரிகளே, 
யோவான் என்னும் நான் பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்: ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும். 

நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் அதன் சிலை மீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள் மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக் கடல் அருகே நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்: 

“கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை. ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.” 

ஆண்டவரின் அருள்வாக்கு.

திங்கள், 23 நவம்பர், 2020

November 24th : GospelThe destruction of the Temple foretold.A Reading from the Holy Gospel according to St.Luke 21:5-11

November 24th :  Gospel

The destruction of the Temple foretold.

A Reading from the Holy Gospel according to St.Luke 21:5-11 
When some were talking about the Temple, remarking how it was adorned with fine stonework and votive offerings, Jesus said, ‘All these things you are staring at now – the time will come when not a single stone will be left on another: everything will be destroyed.’ And they put to him this question: ‘Master,’ they said ‘when will this happen, then, and what sign will there be that this is about to take place?’
  ‘Take care not to be deceived,’ he said ‘because many will come using my name and saying, “I am he” and, “The time is near at hand.” Refuse to join them. And when you hear of wars and revolutions, do not be frightened, for this is something that must happen but the end is not so soon.’ Then he said to them, ‘Nation will fight against nation, and kingdom against kingdom. There will be great earthquakes and plagues and famines here and there; there will be fearful sights and great signs from heaven.’

The Gospel of the Lord.

November 24th : Responsorial PsalmPsalm 95(96):10-13 The Lord comes to rule the earth.

November 24th :  Responsorial Psalm

Psalm 95(96):10-13 

The Lord comes to rule the earth.
Proclaim to the nations: ‘God is king.’
  The world he made firm in its place;
  he will judge the peoples in fairness.

The Lord comes to rule the earth.

Let the heavens rejoice and earth be glad,
  let the sea and all within it thunder praise,
let the land and all it bears rejoice,
  all the trees of the wood shout for joy
at the presence of the Lord for he comes,
  he comes to rule the earth.

The Lord comes to rule the earth.

With justice he will rule the world,
  he will judge the peoples with his truth.

The Lord comes to rule the earth.

Gospel Acclamation Lk21:28

Alleluia, alleluia!
Stand erect, hold your heads high,
because your liberation is near at hand.
Alleluia!

November 24th : First ReadingThe harvest and the vintage of the earth are ripe.Apocalypse 14:14-19

November 24th : First Reading

The harvest and the vintage of the earth are ripe.

Apocalypse 14:14-19 
In my vision I, John, saw a white cloud and, sitting on it, one like a son of man with a gold crown on his head and a sharp sickle in his hand. Then another angel came out of the sanctuary, and shouted aloud to the one sitting on the cloud, ‘Put your sickle in and reap: harvest time has come and the harvest of the earth is ripe.’ Then the one sitting on the cloud set his sickle to work on the earth, and the earth’s harvest was reaped.
  Another angel, who also carried a sharp sickle, came out of the temple in heaven, and the angel in charge of the fire left the altar and shouted aloud to the one with the sharp sickle, ‘Put your sickle in and cut all the bunches off the vine of the earth; all its grapes are ripe.’ So the angel set his sickle to work on the earth and harvested the whole vintage of the earth and put it into a huge winepress, the winepress of God’s anger.

The Word of the Lord.

நவம்பர் 24 : நற்செய்தி வாசகம்கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11

நவம்பர் 24  :   நற்செய்தி வாசகம்

கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11

அக்காலத்தில்
கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.

அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது” என்றார்.

மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.