வியாழன், 23 ஏப்ரல், 2026
ஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம்எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 52-59
ஏப்ரல் 24 : பதிலுரைப் பாடல்திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15)பல்லவி: உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.அல்லது: அல்லேலூயா.
ஏப்ரல் 24 : முதல் வாசகம்பிற இனத்தவருக்கு எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் சவுல் இருக்கிறார்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-20
April 24th : Gospel My flesh is real food and my blood is real drinkA Reading from the Holy Gospel according to St.John 6: 52-59
April 24th : Responsorial PsalmPsalm 117:1, 2 (R. see Mark 16:15)Response : Go into all the world, and proclaim the Gospel.
April 24th : First Reading This man is my chosen instrument to bring my name before the pagansA Reading from the Acts of Apostles 9: 1-20
புதன், 22 ஏப்ரல், 2026
April 23rd: Gospel I am the living bread which has come down from heavenA Reading from the Holy Gospel according to St.John 6 : 44-51
April 23rd : Responsorial PsalmPsalm 66:8–9, 16–17, 20 (R. 1)Response : Cry out with joy to God, all the earth.O peoples, bless
நற்செய்தி வாசகம்விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 44-51அக்காலத்தில்
நற்செய்தி வாசகம்
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 44-51
அக்காலத்தில்
இயேசு யூதர்களைப் பார்த்துக் கூறியது: “என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். ‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்’ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது.
தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.
வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்திபா 66: 8-9. 16-17. 20 (பல்லவி: 1)பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!அல்லது: அல்லேலூயா.
பதிலுரைப் பாடல்
திபா 66: 8-9. 16-17. 20 (பல்லவி: 1)பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
அல்லது: அல்லேலூயா.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 6: 51அல்லேலூயா, அல்லேலூயா! “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.