ஜூன் 29 : நற்செய்தி வாசகம்
ஞாயிறு, 28 ஜூன், 2026
ஜூன் 29 : நற்செய்தி வாசகம் உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19
ஜூன் 29 : இரண்டாம் வாசகம் இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18
ஜூன் 29 : இரண்டாம் வாசகம்
ஜூன் 29 : பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)
ஜூன் 29 : பதிலுரைப் பாடல்
ஜூன் 29 : புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழாத் திருப்பலி முதல் வாசகம் ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11
ஜூன் 29 : புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழாத் திருப்பலி
June 29th : Gospel You are Peter and on this rock I will build my Church A Reading from the Holy Gospel according to St.Matthew 16: 13-19
June 29th : Gospel
June 29th : Second Reading All there is to come now is the crown of righteousness reserved for me A Reading from the Second Letter of St.Paul to Timothy 4: 6-8,17-18
June 29th : Second Reading
June 29th : Responsorial Psalm Psalm 34:2–3, 4–5, 6–7, 8–9 (R. see 5b) Response : From all my terrors he set me free.
June 29th : Responsorial Psalm
June 29th : First Reading 'Now I know the Lord really did save me from Herod' A Reading from the Acts of Apostles 12: 1-11
June 29th : First Reading
சனி, 27 ஜூன், 2026
ஜூன் 28 : நற்செய்தி வாசகம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் அல்ல. ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 37-42
ஜூன் 28 : நற்செய்தி வாசகம்
ஜூன் 28 : இரண்டாம் வாசகம் கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 3-4, 8-11
ஜூன் 28 : இரண்டாம் வாசகம்
கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 3-4, 8-11
சகோதரர் சகோதரிகளே,
திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.
கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்க மாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒரு முறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார்.
அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக்கொள்ளுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
1 பேது 2: 9
அல்லேலூயா, அல்லேலூயா!
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி. அல்லேலூயா