இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 6 ஜனவரி, 2021

🌿07/01/2021, திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன்_ முதல் வாசகம் _கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்._திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 19-5: 4

_🌿07/01/2021, திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன்_ 

முதல் வாசகம் 

_கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்._

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 19-5: 4 
அன்பார்ந்தவர்களே, கடவுளே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம். கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை. இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*

செவ்வாய், 5 ஜனவரி, 2021

GOSPEL* They saw Jesus walking on the sea. A Reading from the Holy Gospel according to Mark 6:45-52

*📖GOSPEL* 

They saw Jesus walking on the sea. 

A Reading from the Holy Gospel according to Mark 6:45-52 
And at once he made his disciples get into the boat and go on ahead to the other side near Bethsaida, while he himself sent the crowd away.
After saying goodbye to them he went off into the hills to pray.
When evening came, the boat was far out on the sea, and he was alone on the land.
He could see that they were hard pressed in their rowing, for the wind was against them; and about the fourth watch of the night he came towards them, walking on the sea. He was going to pass them by,
but when they saw him walking on the sea they thought it was a ghost and cried out;
for they had all seen him and were terrified. But at once he spoke to them and said, 'Courage! It's me! Don't be afraid.'
Then he got into the boat with them and the wind dropped. They were utterly and completely dumbfounded,
because they had not seen what the miracle of the loaves meant; their minds were closed. 

*The Gospel of the Lord* 

I believe in God,

RESPONSORIAL* Respons : Lord, all races will serve you. Psalms 72:1-2, 10, 12-13

*🍁RESPONSORIAL* 

Respons : Lord, all races will serve you. 

Psalms 72:1-2, 10, 12-13 
God, endow the king with your own fair judgement, the son of the king with your own saving justice,
that he may rule your people with justice, and your poor with fair judgement. 

the kings of Tarshish and the islands will pay him tribute. The kings of Sheba and Saba will offer gifts; 

For he rescues the needy who calls to him, and the poor who has no one to help.
He has pity on the weak and the needy, and saves the needy from death. 

___ 

*🌿Gospel Acclamation* 

```Alleluia, alleluia! Glory to you, Christ, proclaimed to the Gentiles! Glory to you, Christ, accepted in the world by faith. Alleluia!``` 

__

FIRST READING* God is with us if we love one another. A Reading from the Book of 1 John 4:11-18

🌿Daily Reading for Wednesday January 6, 2021 

*FIRST READING* 

God is with us if we love one another. 

A Reading from the Book of 1 John 4:11-18 
My dear friends, if God loved us so much, we too should love one another.
No one has ever seen God, but as long as we love one another God remains in us and his love comes to its perfection in us.
This is the proof that we remain in him and he in us, that he has given us a share in his Spirit.
We ourselves have seen and testify that the Father sent his Son as Saviour of the world.
Anyone who acknowledges that Jesus is the Son of God, God remains in him and he in God.
We have recognised for ourselves, and put our faith in, the love God has for us. God is love, and whoever remains in love remains in God and God in him.
Love comes to its perfection in us when we can face the Day of Judgement fearlessly, because even in this world we have become as he is.
In love there is no room for fear, but perfect love drives out fear, because fear implies punishment and no one who is afraid has come to perfection in love. 

*The Word of the Lord*

நற்செய்தி வாசகம்*இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டனர். + மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 45-52

*நற்செய்தி வாசகம்*

இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டனர். 

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 45-52 
ஐயாயிரம் பேர் உணவு உண்ட பின் இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, `அது பேய்' என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள். ஏனெனில் அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது. 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பதிலுரைப் பாடல் திபா 72: 1-2. 10-11. 12-13 பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

பதிலுரைப் பாடல் 

திபா 72: 1-2. 10-11. 12-13 

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள். 
1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!
உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. -பல்லவி 

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்;
சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.
11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்;
எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். -பல்லவி 

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.
13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்;
ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். -பல்லவி
___ 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! பிற இனத்தாருக்குப் பறை சாற்றப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை; விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை. அல்லேலூயா.

06/01/2021, திருக்காட்சி விழாவுக்குப்பின் புதன்*முதல் வாசகம் நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18

*🌿06/01/2021, திருக்காட்சி விழாவுக்குப்பின் புதன்*

முதல் வாசகம் 

நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார். 

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18 
அன்பார்ந்தவர்களே, கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்துகொள்கிறோம். தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம். எனவே தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போம். இவ்வாறு நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது. அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது. 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

திங்கள், 4 ஜனவரி, 2021

GOSPEL* Jesus multiplies the bread and shows that he is the Lord. A Reading from the Holy Gospel according to Mark 6:34-44

*📖GOSPEL* 

Jesus multiplies the bread and shows that he is the Lord. 

A Reading from the Holy Gospel according to Mark 6:34-44 
So as he stepped ashore he saw a large crowd; and he took pity on them because they were like sheep without a shepherd, and he set himself to teach them at some length.
By now it was getting very late, and his disciples came up to him and said, 'This is a lonely place and it is getting very late,
so send them away, and they can go to the farms and villages round about, to buy themselves something to eat.'
He replied, 'Give them something to eat yourselves.' They answered, 'Are we to go and spend two hundred denarii on bread for them to eat?'
He asked, 'How many loaves have you? Go and see.' And when they had found out they said, 'Five, and two fish.'
Then he ordered them to get all the people to sit down in groups on the green grass,
and they sat down on the ground in squares of hundreds and fifties.
Then he took the five loaves and the two fish, raised his eyes to heaven and said the blessing; then he broke the loaves and began handing them to his disciples to distribute among the people. He also shared out the two fish among them all.
They all ate as much as they wanted.
They collected twelve basketfuls of scraps of bread and pieces of fish.
Those who had eaten the loaves numbered five thousand men. 

*The Gospel of the Lord* 

I believe in God, /...

RESPONSORIAL* Respons : Lord, all races will serve you. Psalms 72:1-2, 3-4, 7-8

*🍁RESPONSORIAL* 

Respons :  Lord, all races will serve you. 

Psalms 72:1-2, 3-4, 7-8 
God, endow the king with your own fair judgement, the son of the king with your own saving justice,
that he may rule your people with justice, and your poor with fair judgement. 

Mountains and hills, bring peace to the people! With justice
he will judge the poor of the people, he will save the children of the needy and crush their oppressors. 

In his days uprightness shall flourish, and peace in plenty till the moon is no more.
His empire shall stretch from sea to sea, from the river to the limits of the earth. 

___ 

*🌿Gospel Acclamation* 

```Alleluia, alleluia! "The Lord has sent me to preach the gospel to the poor, and to proclaim unto the prisoners that they shall be delivered." Alleluia!``` 

__

FIRST READING* God is loving. A Reading from the Book of 1 John 4:7-10

🌿Daily Reading for Tuesday January 5, 2021 

*FIRST READING* 

God is loving. 

A Reading from the Book of 1 John 4:7-10 
My dear friends, let us love one another, since love is from God and everyone who loves is a child of God and knows God.
Whoever fails to love does not know God, because God is love.
This is the revelation of God's love for us, that God sent his only Son into the world that we might have life through him.
Love consists in this: it is not we who loved God, but God loved us and sent his Son to expiate our sins. 

*The Word of the Lord*