இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 15 ஜூன், 2024

ஜூன் 16 : பதிலுரைப் பாடல்திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1b காண்க)பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.

ஜூன் 16  : பதிலுரைப் பாடல்

திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1b காண்க)

பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.
1
ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.
2
காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. - பல்லவி

12
நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.
13
ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். - பல்லவி

14
அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;
15
‘ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை’ என்று அறிவிப்பர். - பல்லவி

ஜூன் 16 : முதல் வாசகம்தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 17: 22-24

ஜூன்  16  :  முதல் வாசகம்

தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 17: 22-24
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக் கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலைமேல் நான் நடுவேன்.

இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும்.

ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என்றும், பசுமையான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்; நான் செய்து காட்டுவேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 16th : Gospel The kingdom of God is a mustard seed growing into the biggest shrub of all.A Reading from the Holy Gospel according to St. Mark 4:26-34

June 16th :   Gospel 

The kingdom of God is a mustard seed growing into the biggest shrub of all.

A Reading from the Holy Gospel according to St. Mark 4:26-34 
Jesus said to the crowds: ‘This is what the kingdom of God is like. A man throws seed on the land. Night and day, while he sleeps, when he is awake, the seed is sprouting and growing; how, he does not know. Of its own accord the land produces first the shoot, then the ear, then the full grain in the ear. And when the crop is ready, he loses no time: he starts to reap because the harvest has come.’
  He also said, ‘What can we say the kingdom of God is like? What parable can we find for it? It is like a mustard seed which at the time of its sowing in the soil is the smallest of all the seeds on earth; yet once it is sown it grows into the biggest shrub of them all and puts out big branches so that the birds of the air can shelter in its shade.’
  Using many parables like these, he spoke the word to them, so far as they were capable of understanding it. He would not speak to them except in parables, but he explained everything to his disciples when they were alone.

The Gospel of the Lord.

June 16th : Second ReadingWe want to be exiled from the body and make our home with the Lord.A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 5: 6-10.

June 16th :  Second Reading

We want to be exiled from the body and make our home with the Lord.

A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 5: 6-10. 
We are always full of confidence when we remember that to live in the body means to be exiled from the Lord, going as we do by faith and not by sight – we are full of confidence, I say, and actually want to be exiled from the body and make our home with the Lord. Whether we are living in the body or exiled from it, we are intent on pleasing him. For all the truth about us will be brought out in the law court of Christ, and each of us will get what he deserves for the things he did in the body, good or bad.

The Word of the Lord.

Gospel Acclamation Jn15:15

Alleluia, alleluia!

I call you friends, says the Lord,
because I have made known to you
everything I have learnt from my Father.
Alleluia!

June 16th : Responsorial PsalmPsalm 91(92):2-3,13-16 It is good to give you thanks, O Lord.

June 16th :   Responsorial Psalm

Psalm 91(92):2-3,13-16 

It is good to give you thanks, O Lord.
It is good to give thanks to the Lord,
  to make music to your name, O Most High,
to proclaim your love in the morning
  and your truth in the watches of the night.

It is good to give you thanks, O Lord.

The just will flourish like the palm tree
  and grow like a Lebanon cedar.

It is good to give you thanks, O Lord.

Planted in the house of the Lord
  they will flourish in the courts of our God,
still bearing fruit when they are old,
  still full of sap, still green,
to proclaim that the Lord is just.
  In him, my rock, there is no wrong.

It is good to give you thanks, O Lord.

June 16th : First ReadingI will plant a shoot on the high mountain of IsraelA Reading from the Book of Ezekiel 17:22-24

June 16th : First Reading

I will plant a shoot on the high mountain of Israel

A Reading from the Book of Ezekiel 17:22-24 
The Lord says this:
‘From the top of the cedar,
from the highest branch I will take a shoot
and plant it myself on a very high mountain.
I will plant it on the high mountain of Israel.
It will sprout branches and bear fruit,
and become a noble cedar.
Every kind of bird will live beneath it,
every winged creature rest in the shade of its branches.
And every tree of the field will learn that I, the Lord, am the one
who stunts tall trees and makes the low ones grow,
who withers green trees and makes the withered green.
I, the Lord, have spoken, and I will do it.’

The Word of the Lord.

வெள்ளி, 14 ஜூன், 2024

ஜூன் 15. : நற்செய்தி வாசகம்நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-37

ஜூன் 15.  : நற்செய்தி வாசகம்

நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-37
அக்காலத்தில்

இயேசு கூறியது: “ ‘பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம்.

உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. ஆகவே நீங்கள் பேசும் போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 15 : முதல் வாசகம்எலிசா புறப்பட்டுப் போய் எலியாவுக்குப் பணிவிடை செய்தார்.அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 19-21

ஜூன் 15  : முதல் வாசகம்

எலிசா புறப்பட்டுப் போய் எலியாவுக்குப் பணிவிடை செய்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 19-21
அந்நாள்களில்

எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர்மீது தூக்கிப் போட்டார். எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, “நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன் பின் உம்மைப் பின்செல்வேன்” என்றார்.

அதற்கு அவர், “சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!” என்றார். எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற, அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 15 : பதிலுரைப் பாடல்திபா 16: 1-2a,5. 7-8. 9-10 . (பல்லவி: 5a)பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

ஜூன்  15 : பதிலுரைப் பாடல்

திபா 16: 1-2a,5. 7-8. 9-10 . (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.
1.இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2a.நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்;’ என்று சொன்னேன்.
5.ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி

7.எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8.ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி

9.என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10.ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 36a, 29b

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். அல்லேலூயா.

June 15th : Responsorial PsalmPsalm 15(16):1-2,5,7-10 You are my inheritance, O Lord.

June 15th :  Responsorial Psalm

Psalm 15(16):1-2,5,7-10 

You are my inheritance, O Lord.
Preserve me, God, I take refuge in you.
  I say to the Lord: ‘You are my God.’
O Lord, it is you who are my portion and cup;
  it is you yourself who are my prize.

You are my inheritance, O Lord.

I will bless the Lord who gives me counsel,
  who even at night directs my heart.
I keep the Lord ever in my sight:
  since he is at my right hand, I shall stand firm.

You are my inheritance, O Lord.

And so my heart rejoices, my soul is glad;
  even my body shall rest in safety.
For you will not leave my soul among the dead,
  nor let your beloved know decay.

You are my inheritance, O Lord.

Gospel Acclamation Ps118:18

Alleluia, alleluia!
Open my eyes, O Lord, that I may consider
the wonders of your law.
Alleluia!