இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

செப்டம்பர் 6 : நற்செய்தி வாசகம் ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்? ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5

 செப்டம்பர் 6 :  நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5


ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர். பரிசேயருள் சிலர், “ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு மறுமொழியாக, “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்று கூறினார். மேலும் அவர்களிடம், “ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 6 : பதிலுரைப் பாடல் திபா 54: 1-2. 4,6 (பல்லவி: 4a) பல்லவி: இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்.

 செப்டம்பர் 6 :  பதிலுரைப் பாடல்

திபா 54: 1-2. 4,6 (பல்லவி: 4a)

பல்லவி: இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்.


1

கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும்.

2

கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். - பல்லவி

4

இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;

6

தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

செப்டம்பர் 6 : முதல் வாசகம் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 21-23

 செப்டம்பர் 6 : முதல் வாசகம்

கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 21-23

சகோதரர் சகோதரிகளே,
முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய் இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள். உலகெங்கும் படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது. பவுலாகிய நான் இந்நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டன் ஆனேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

September 6th : Gospel The Son of Man is master of the sabbath A reading from the Holy Gospel according to St.Luke 6: 1-5

 September 6th :  Gospel 

The Son of Man is master of the sabbath

A reading from the Holy Gospel according to St.Luke 6: 1-5 

On a sabbath, while he was going through the grainfields, his disciples plucked and ate some ears of grain, rubbing them in their hands. But some of the Pharisees said, “Why are you doing what is not lawful to do on the sabbath?” And Jesus answered, “Have you not read what David did when he was hungry, he and those who were with him: how he entered the house of God, and took and ate the bread of the Presence, which it is not lawful for any but the priests to eat, and also gave it to those with him?” And he said to them, “The Son of man is lord of the sabbath.”

The Word of the Lord.

September 6th : Responsorial Psalm Psalm 53(54):3-4,6,8

 September 6th :  Responsorial Psalm

Psalm 53(54):3-4,6,8 

Response : God himself is my help.

O God, by your name save me,

    and by your might defend my cause.

O God, hear my prayer;

    hearken to the words of my mouth.

Response :  God himself is my help.

Behold, God is my helper;

    the Lord sustains my life.

Freely will I offer you sacrifice;

    I will praise your name, O LORD, for its goodness.

Response :  God himself is my help.

Gospel Acclamation

Alleluia, alleluia!

Instruct me, Lord, in your way;

on an even path lead me.

Alleluia!

September 6th : First reading God has reconciled you by Christ's death in his mortal body A reading from the letter of St.Paul to the Colossians 1:21-23

 September 6th :  First reading

God has reconciled you by Christ's death in his mortal body

A reading from the letter of St.Paul to the Colossians 1:21-23 

And you, who once were estranged and hostile in mind, doing evil deeds, he has now reconciled in his body of flesh by his death, in order to present you holy and blameless and irreproachable before him, provided that you continue in the faith, stable and steadfast, not shifting from the hope of the gospel which you heard, which has been preached to every creature under heaven, and of which I, Paul, became a minister.

The Word of the Lord.

வியாழன், 4 செப்டம்பர், 2025

செப்டம்பர் 5 : நற்செய்தி வாசகம்மணமகன் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது நோன்பு இருப்பார்கள்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-39.

செப்டம்பர் 5 : நற்செய்தி வாசகம்

மணமகன் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது நோன்பு இருப்பார்கள்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-39.
அக்காலத்தில்

பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார்.

அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.

அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்; ஏனெனில் ‘பழையதே நல்லது’ என்பது அவர் கருத்து.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 5 : பதிலுரைப் பாடல்திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 2a)பல்லவி: ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!

செப்டம்பர் 5 :  பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

4
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! - பல்லவி

5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

செப்டம்பர் 5 : முதல் வாசகம்அனைத்தும் கிறிஸ்து வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20.

செப்டம்பர் 5  :  முதல் வாசகம்

அனைத்தும் கிறிஸ்து வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20.
சகோதரர் சகோதரிகளே,

இயேசு கிறிஸ்து கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடு இணைந்து நிலைபெறுகின்றன.

திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 5th : GospelWhen the bridegroom is taken from them, then they will fast.A Reading from the Holy Gospel according to St.Luke 5:33-39.

September 5th :  Gospel

When the bridegroom is taken from them, then they will fast.

A Reading from the Holy Gospel according to St.Luke 5:33-39.

And they said to him, “The disciples of John fast often and offer prayers, and so do the disciples of the Pharisees, but yours eat and drink.” And Jesus said to them, “Can you make wedding guests fast while the bridegroom is with them? The days will come, when the bridegroom is taken away from them, and then they will fast in those days.” He told them a parable also: “No one tears a piece from a new garment and puts it upon an old garment; if he does, he will tear the new, and the piece from the new will not match the old. And no one puts new wine into old wineskins; if he does, the new wine will burst the skins and it will be spilled, and the skins will be destroyed. But new wine must be put into fresh wineskins. And no one after drinking old wine desires new; for he says, ‘The old is good.’ ”

The Word of the Lord.