இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 23 மார்ச், 2026

மார்ச் 24 : முதல் வாசகம் பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான். எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

 மார்ச் 24 :  முதல் வாசகம்

பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9


அந்நாள்களில்

ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேலர் ‘செங்கடல் சாலை’ வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்” என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


ஞாயிறு, 22 மார்ச், 2026

மார்ச் 23 : நற்செய்தி வாசகம்உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11

மார்ச் 23 : நற்செய்தி வாசகம்

உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11
அக்காலத்தில்

இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டுவந்து நடுவில் நிறுத்தி, ‘‘போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.

இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ‘‘உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.

இயேசு நிமிர்ந்து பார்த்து, ‘‘அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர், ‘‘இல்லை, ஐயா” என்றார். இயேசு அவரிடம், ‘‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 23 : பதிலுரைப் பாடல்திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 4ab)பல்லவி: இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும், நான் எதற்கும் அஞ்சிடேன்.

மார்ச் 23 : பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 4ab)

பல்லவி: இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும், நான் எதற்கும் அஞ்சிடேன்.
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்.அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். – பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். – பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

எசே 33: 11

‘தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பமன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்,’ என்கிறார் ஆண்டவர்

மார்ச் 23 : முதல் வாசகம்குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 2: 1-9, 15-17, 19-30, 33-62

மார்ச் 23 : முதல் வாசகம்

குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 2: 1-9, 15-17, 19-30, 33-62
அந்நாள்களில்

பாபிலோனில் யோவாக்கிம் என்னும் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சூசன்னாவை மணந்தார். சூசன்னா கில்கியாவின் மகள்; அவர் பேரழகி; ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர். அவர் பெற்றோர் நேர்மையாளராய் இருந்ததால், தங்கள் மகளை மோசே சட்டத்தின் வழியில் பயிற்றுவித்தனர். யோவாக்கிம் பெரும் செல்வர். அவரது வீட்டுக்கு அருகிலேயே அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. யூதர்கள் அவரிடம் வருவது வழக்கம்; ஏனெனில் மற்ற எல்லாரையும்விட அவர் மிகவும் மதிக்கப் பெற்றார்.

அக்காலத்தில் மக்களுள் முதியோர் இருவர் நடுவராய் நியமிக்கப் பெற்றனர். இவர்களைப் பற்றியே ஆண்டவர், ‘‘நடுவர்களாய் இருந்து மக்களை வழிநடத்தவேண்டிய மூப்பர்கள் வாயிலாகப் பாபிலோனினின்று ஒழுக்கக்கேடு வந்துற்றது” என்று சொல்லியிருந்தார். இவர்கள் யோவாக்கிம் வீட்டில் நெடுநேரம் இருப்பது வழக்கம். வழக்குடையோர் அனைவரும் இவர்களை அணுகுவதுண்டு. நண்பகல் வேளையில் மக்கள் சென்றபின், சூசன்னா தம் கணவரின் தோட்டத்திற்குள் சென்று உலாவு வார். அவர் நாள்தோறும் அங்குச் சென்று உலாவுவதைப் பார்த்து வந்த அந்த முதியோர் இருவரும் அவரைக் காமுறத் தொடங்கினர். இதனால் அவர்கள் தங்கள் மனத்தைத் தகாத வழியில் செலவிட்டார்கள். விண்ணக இறைவனை நினையாதவாறும் நீதித் தீர்ப்புகளைக் கருதாதவாறும் அவர்கள் நெறி மாறிச் சென்றார்கள்.

அதற்கு ஏற்றதொரு நாளை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். ஒரு நாள் சூசன்னா வழக்கம்போல் இரண்டு பணிப்பெண்களோடு மட்டும் தோட்டத்தினுள் நுழைந்து, குளிக்க விரும்பினார்; ஏனெனில், அன்று வெயில் கடுமையாக இருந்தது. அந்த முதியோர் இருவரைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. அவர்களோ ஒளிந்திருந்து சூசன்னாவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சூசன்னா பணிப் பெண்களிடம், ‘‘நான் குளிக்க எண்ணெயும் நறுமணப் பொருள்களும் கொண்டு வாருங்கள்; பிறகு தோட்டத்தின் வாயில்களை மூடிவிடுங்கள்” என்று சொன்னார். பணிப்பெண்கள் வெளியேறியதும் முதியோர் இருவரும் எழுந்து சூசன்னாவிடம் ஓடோடிச் சென்றனர். அவரை நோக்கி, ‘‘இதோ! தோட்டத்தின் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. யாரும் நம்மைப் பார்க்க முடியாது. நாங்கள் உன்மேல் வேட்கை கொண்டுள்ளோம். எனவே நீ எங்களுக்கு இணங்கி எங்களோடு படு. இல்லாவிடில், ஓர் இளைஞன் உன்னோடு இருந்தான் என்றும், அதற்காகவே நீ பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டாய் என்றும் உனக்கு எதிராக நாங்கள் சான்று கூறுவோம்” என்றார்கள். சூசன்னா பெருமூச்சு விட்டு, ‘‘நான் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். நான் உங்களுக்கு இணங்கினால், எனக்குக் கிடைப்பது சாவு; இணங்காவிட்டால் நான் உங்களிடமிருந்து தப்ப முடியாது. ஆனால் ஆண்டவர் முன்னிலையில் பாவம் செய்வதை விட, அதைச் செய்யாமல் உங்களிடம் மாட்டிக்கொள்வதே மேல்” என்றார். பின் சூசன்னா உரத்த குரலில் கத்தினார். உடனே முதியோர் இருவரும் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர். அவர்களுள் ஒருவர் ஓடிப்போய்த் தோட்டத்துக் கதவுகளைத் திறந்தார். தோட்டத்தில் கூச்சல் கேட்டதும், சூசன்னாவுக்கு என்ன நிகழ்ந்ததோ என்று அறிய அவர் வீட்டில் இருந்தோர் ஓரக் கதவு வழியே ஓடிவந்தனர். ஆனால் முதியோர் தங்கள் கட்டுக் கதையைச் சொன்னபொழுது, பணியாளர் பெரிதும் நாணங்கொண்டனர்; ஏனெனில் சூசன்னாவைப் பற்றி இது போன்ற எதையும் அவர்கள் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.

மறுநாள் சூசன்னாவுடைய கணவர் யோவாக்கிம் வீட்டில் மக்கள் திரண்டு வந்தார்கள். சூசன்னாவைக் கொல்லும் தீய நோக்குடன் அந்த முதியோர் இருவரும் சேர்ந்து வந்திருந்தனர். அவர்கள் மக்கள் முன்னிலையில், ‘‘கில்கியா மகளும் யோவாக்கிம் மனைவியுமான சூசன்னாவை இங்கு அழைத்து வருமாறு ஆள் அனுப்புங்கள்” என்று கட்டளையிட்டார்கள். உடனே அவரை அழைத்து வர ஆள் அனுப்பினர். சூசன்னா வந்தார். அவரோடு அவருடைய பெற்றோர், பிள்ளைகள், உறவினர் எல்லாரும் வந்தனர். அவருடைய உற்றார் உறவினரும், அவரைப் பார்த்தவர் அனைவருமே அழுதுகொண்டிருந்தார்கள். முதியோர் இருவரும் மக்கள் நடுவே எழுந்து நின்று, சூசன்னா தலைமீது தங்கள் கைகளை வைத்தனர். அவரோ அழுதுகொண்டே விண்ணக இறைவனை நோக்கினார்; ஏனெனில் அவர் உள்ளம் ஆண்டவரை நம்பியிருந்தது. அப்பொழுது முதியோர் பின்வருமாறு கூறினர்: ‘‘நாங்கள் தோட்டத்தில் தனியாக உலாவிக் கொண்டிருந்த பொழுது, இவள் இரு பணிப்பெண்களோடு உள்ளே வந்தாள்; தோட்டத்து வாயில்களை மூடியபின், பணிப் பெண்களை வெளியே அனுப்பி விட்டாள். பின்னர் அங்கே ஒளிந்துகொண்டிருந்த ஓர் இளைஞன் இவளிடம் வந்து இவளோடு படுத்தான். நாங்களோ தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்தோம்; இந்த நெறிகெட்ட செயலைக் கண்டதும் அவர்களிடம் ஓடிச் சென்றோம். அவர்கள் சேர்ந்திருந்ததைப் பார்த்தோம். ஆனால் அந்த இளைஞனை எங்களால் பிடிக்க முடியவில்லை; ஏனெனில் அவன் எங்களை விட வலிமை மிக்கவன். எனவே அவன் கதவைத் திறந்து வெளியே ஓடிவிட்டான். நாங்கள் இவளைப் பிடித்து, அந்த இளைஞன் யார் என்று கேட்டோம். இவளோ எங்களுக்கு மறுமொழி கூற மறுத்துவிட்டாள். இவற்றுக்கு நாங்களே சாட்சி”. அவர்கள் மக்களுள் மூப்பர்களாகவும் நடுவர்களாகவும் இருந்ததால், மக்கள் கூட்டம் அவர்கள் சொன்னதை நம்பி சூசன்னாவுக்குச் சாவுத் தீர்ப்பிட்டது.

அப்பொழுது சூசன்னா உரத்த குரலில் கதறி, ‘‘என்றுமுள்ள இறைவா, மறைவானவற்றை நீர் அறிகிறீர். நிகழுமுன்பே எல்லாம் உமக்குத் தெரியும். இவர்கள் எனக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியுள்ளனர் என்பதும் உமக்குத் தெரியும். இவர்கள் என்மீது சாட்டிய குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!” என்று சொன்னார். ஆண்டவர் சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார்.

கொல்லப்படுமாறு அவர் நடத்திச் செல்லப்பட்டபொழுது, தானியேல் என்னும் பெயருடைய இளைஞரிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டி விட்டார். தானியேல் உரத்த குரலில், ‘‘இவருடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை” என்று கத்தினார். மக்கள் அனைவரும் அவர்பால் திரும்பி, ‘‘நீர் என்ன சொல்கிறீர்?” என்று வினவினர். அவரோ அவர்கள் நடுவே நின்றுகொண்டு பின்வருமாறு சொன்னார்: ‘‘இஸ்ரயேல் மக்களே, வழக்கை ஆராயாமலும், உண்மையை அறிந்துகொள்ளாமலும் இஸ்ரயேல் மகள் ஒருத்தியைத் தீர்ப்பிடத் துணிந்துவிட்டீர்களே! அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? நீதி வழங்கும் இடத்திற்குத் திரும்பிப் போங்கள்; இம்மனிதர்கள் இவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

எனவே மக்கள் எல்லாரும் விரைவாகத் திரும்பி வந்தார்கள். மற்ற மூப்பர்கள் தானியேலிடம், ‘‘நீர் வந்து, எங்கள் நடுவே அமர்ந்து, எங்களுக்கு விரிவாய் விளக்கிக் காட்டும்; ஏனெனில் மூப்பருக்குரிய சிறப்பை கடவுள் உமக்கு அளித்துள்ளார்” என்று வேண்டிக்கொண்டார்கள். அப்பொழுது தானியேல், ‘‘இவர்களைத் தனித்தனியே பிரித்துத் தொலையில் வையுங்கள். நான் இவர்களை வினவுவேன்” என்றார். எனவே அவர்கள் இருவரையும் தனித்தனியே பிரித்து வைத்தார்கள். அப்பொழுது தானியேல் அவர்களுள் ஒருவரை அழைத்து, ‘‘தீச்செயலில் விளைந்தவனே! நீ முன்பு செய்த பாவங்கள் இப்பொழுது வெளியாகிவிட்டன. ‘‘மாசற்றவர்களையும் நீதிமான்களையும் சாவுக்கு உள்ளாக்காதே” என்று ஆண்டவர் சொல்லியிருந்தும் நீ முறைகேடாகத் தீர்ப்புகள் வழங்கி, மாசற்றவர்களைத் தண்டித்து, குற்றவாளிகளை விடுவித்துள்ளாய். இதோ! நீ உண்மையிலேயே சூசன்னாவைப் பார்த்திருந்தால், எந்த மரத்தடியில் அவர்கள் கூடியிருக்கக் கண்டாய், சொல்” என்று கேட்டார். அதற்கு அவர், ‘‘விளா மரத்தடியில்” என்றார். அதற்குத் தானியேல், ‘‘நீ நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் கடவுளின் தூதர் ஏற்கெனவே இறைவனிடமிருந்து தீர்ப்பைப் பெற்றுவிட்டார். அவர் உன்னை இரண்டாக வெட்டிப் பிளப்பார்” என்றார்.

பின் அவரை அனுப்பிவிட்டு மற்றவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு பணித்தார். அவரை நோக்கி, ‘‘நீ யூதாவுக்கல்ல, கானானுக்குப் பிறந்தவன். அழகு உன்னை மயக்கிவிட்டது; காமம் உன்னை நெறிதவறச் செய்து விட்டது. நீங்கள் இருவரும் இஸ்ரயேல் மகளிரை இவ்வாறே நடத்தி வந்திருக் கிறீர்கள். அவர்களும் அச்சத்தால் உங்களுக்கு இணங்கிவந்திருக்கிறார்கள். ஆனால் யூதாவின் மகளாகிய இவரால் உங்கள் தீச்செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதோ! எந்த மரத்தடியில் சேர்ந்திருக்கும்பொழுது நீ இவர்களைப் பிடித்தாய்? சொல்” என்றார். அவரோ, ‘‘கருவாலி மரத்தடியில்” என்றார். தானியேல் அவரிடம், ‘‘நீயும் நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் உன்னை இரு கூறாக வெட்டவும், இவ்வாறு உங்கள் இருவரையும் அழித்தொழிக்கவும் கடவுளின் தூதர் வாளுடன் காத்துக்கொண்டிருக்கிறார்” என்றார். உடனே மக்கள் கூட்டம் முழுவதும் உரத்த குரல் எழுப்பி, தம்மில் நம்பிக்கை வைப்போருக்கு மீட்பளிக்கும் கடவுளைப் போற்றியது. அவர்கள் அந்த முதியோர் இருவருக்கும் எதிராக எழுந்தார்கள்; ஏனெனில் அவர்கள் பொய்ச் சான்று சொன்னதை அவர்கள் வாய்மொழியாகவே தானியேல் மெய்ப்பித்திருந்தார். அம்முதியோர் பிறருக்குச் செய்ய இருந்த தீங்கை அவர்களுக்கே மக்கள் செய்தார்கள். மோசே சட்டப்படி அவர்களைக் கொன்றார்கள். இவ்வாறு மாசற்ற சூசன்னா அன்று காப்பாற்றப்பட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 23rd : GospelA Reading from the Holy Gospel according to St.John 8:1-11

March 23rd : Gospel

A Reading from the Holy Gospel according to St.John 8:1-11

At that time: Jesus went to the Mount of Olives. Early in the morning he came again to the temple. All the people came to him, and he sat down and taught them. The scribes and the Pharisees brought a woman who had been caught in adultery, and placing her in the midst they said to him, “Teacher, this woman has been caught in the act of adultery. Now in the Law, Moses commanded us to stone such women. So what do you say?” This they said to test him, that they might have some charge to bring against him. Jesus bent down and wrote with his finger on the ground. And as they continued to ask him, he stood up and said to them, “Let him who is without sin among you be the first to throw a stone at her.” And once more he bent down and wrote on the ground. But when they heard it, they went away one by one, beginning with the older ones, and Jesus was left alone with the woman standing before him. Jesus stood up and said to her, “Woman, where are they? Has no one condemned you?” She said, “No one, Lord.” And Jesus said, “Neither do I condemn you; go, and from now on sin no more.”

The Gospel of the Lord.

March 23rd : Responsorial PsalmPsalm 23:1–3a, 3b–4, 5, 6 (R. 4ab)

March 23rd : Responsorial Psalm

Psalm 23:1–3a, 3b–4, 5, 6 (R. 4ab)

Response :  Though I should walk in the valley of the shadow of death, no evil would I fear, for you are with me.

The Lord is my shepherd; there is nothing I shall want. Fresh and green are the pastures where he gives me repose. Near restful waters he leads me; he revives my soul. 

R.:  Though I should walk in the valley of the shadow of death, no evil would I fear, for you are with me.

He guides me along the right path, for the sake of his name. Though I should walk in the valley of the shadow of death, no evil would I fear, for you are with me. Your crook and your staff will give me comfort. 

R.:  Though I should walk in the valley of the shadow of death, no evil would I fear, for you are with me.

You have prepared a table before me in the sight of my foes. My head you have anointed with oil; my cup is overflowing. R.

Surely goodness and mercy shall follow me all the days of my life. In the Lord’s own house shall I dwell for length of days unending. R.

Verse before the Gospel
V. Glory and praise to you, O Christ.

R. Glory and praise to you, O Christ.

V. I have no pleasure in the death of the wicked, says the Lord, but that the wicked turn from his way and live.

R. Glory and praise to you, O Christ.

March 23rd : First ReadingDaniel 13:1-9, 15-17, 19-30, 33-62

March 23rd :  First Reading

Daniel 13:1-9, 15-17, 19-30, 33-62

In those days: There was a man living in Babylon whose name was Joakim. And he took a wife named Susanna daughter of Hilkiah, a very beautiful woman and one who feared the Lord. Her parents were righteous and had taught their daughter according to the law of Moses. Joakim was very rich and had a spacious garden adjoining his house; and the Jews used to come to him because he was the most honoured of them all. In that year two elders from the people were appointed as judges. Concerning them the Lord had said: “Iniquity came forth from Babylon, from elders who were judges, who were supposed to govern the people.” These men were frequently at Joakim’s house, and all who had lawsuits came to them. When the people departed at noon, Susanna would go into her husband’s garden to walk. The two elders used to see her every day, going in and walking about, and they began to desire her. And they perverted their minds and turned away their eyes from looking to heaven or remembering righteous judgments. Once, while they were watching for an opportune day, she went in as before with only two maids and wished to bathe in the garden, for it was very hot. And no one was there except the two elders, who had hid themselves and were watching her. She said to her maids, “Bring me oil and ointments and shut the garden doors so that I may bathe.” When the maids had gone out, the two elders rose and ran to her and said: “Look, the garden doors are shut, no one sees us, and we lust for you; so give your consent and be with us. If you refuse, we will testify against you that a young man was with you, and this was why you sent your maids away from you.” Susanna sighed deeply and said, “I am hemmed in on every side. For if I do this thing, it is death for me; and if I do not, I shall not escape your hands. I choose not to do it and to fall into your hands, rather than to sin in the sight of the Lord.” Then Susanna cried out with a loud voice, and the two elders shouted against her. And one of them ran and opened the garden doors. When the household servants heard the shouting in the garden, they rushed in at the side door to see what had happened to her. And when the elders told their tale, the servants were greatly ashamed, for nothing like this had ever been said about Susanna. The next day, when the people gathered to her husband Joakim, the two elders came, full of their wicked plot to have Susanna put to death. They said before the people, “Send for Susanna daughter of Hilkiah, who is the wife of Joakim.” So they sent for her. And she came, with her parents, her children, and all her kindred. But her family and friends and all who saw her wept. Then the two elders stood up in the midst of the people and laid their hands upon her head. And she, weeping, looked up toward heaven, for her heart trusted in the Lord. The elders said, “As we were walking in the garden alone, this woman came in with two maids, shut the garden doors, and dismissed the maids. Then a young man, who had been hidden, came to her and lay with her. We were in a corner of the garden, and when we saw this wickedness we ran to them. We saw them embracing, but we could not hold the man, for he was too strong for us, and he opened the doors and dashed out. So we seized this woman and asked her who the young man was, but she would not tell us. These things we testify.” The assembly believed them, because they were elders of the people and judges; and they condemned her to death. Then Susanna cried out with a loud voice and said, “O eternal God, who does discern what is secret, who is aware of all things before they come to be, you know that these men have borne false witness against me. And now I am to die! Yet I have done none of the things that they have wickedly invented against me!” The Lord heard her cry. And as she was being led away to be put to death, God aroused the holy spirit of a young lad named Daniel; and he cried with a loud voice, “I am innocent of the blood of this woman.” All the people turned to him and said, “What is this that you have said?” Taking his stand in the midst of them, he said, “Are you such fools, you sons of Israel? Have you condemned a daughter of Israel without examination and without learning the facts? Return to the place of judgment. For these men have borne false witness against her.” Then all the people returned in haste. And the elders said to him, “Come, sit among us and inform us, for God has given you that right.” And Daniel said to them, “Separate them far from each other, and I will examine them.” When they were separated from each other, he summoned one of them and said to him, “You old relic of wicked days, your sins have now come home, which you have committed in the past, pronouncing unjust judgments, condemning the innocent, and letting the guilty go free, though the Lord said, ‘Do not put to death an innocent and righteous person.’ Now then, if you really saw her, tell me this: Under what tree did you see them being intimate with each other?” He answered, “Under a mastic tree.” And Daniel said, “Very well! You have lied against your own head, for the angel of God has received the sentence from God and will immediately cut you in two.” Then he put him aside and commanded them to bring the other. And he said to him, “You offspring of Canaan and not of Judah, beauty has deceived you and lust has perverted your heart. This is how you both have been dealing with the daughters of Israel, and they were intimate with you through fear; but a daughter of Judah would not endure your wickedness. Now then, tell me: Under what tree did you catch them being intimate with each other?” He answered, “Under an evergreen oak.” And Daniel said to him, “Very well! You also have lied against your own head, for the angel of God is waiting with his sword to saw you in two, that he may destroy you both.” Then all the assembly shouted loudly and blessed God, who saves those who hope in him. And they rose against the two elders, for out of their own mouths Daniel had convicted them of bearing false witness; and they did to them as they had wickedly planned to do to their neighbour; acting in accordance with the law of Moses, they put them to death. Thus innocent blood was saved that day.

The Word of the Lord.

சனி, 21 மார்ச், 2026

March 22nd : Gospel I am the resurrection and the lifeA Reading from the Holy Gospel according to St.John 11:1-45

March 22nd : Gospel 

I am the resurrection and the life

A Reading from the Holy Gospel according to St.John 11:1-45 

There was a man named Lazarus who lived in the village of Bethany with the two sisters, Mary and Martha, and he was ill. It was the same Mary, the sister of the sick man Lazarus, who anointed the Lord with ointment and wiped his feet with her hair. The sisters sent this message to Jesus, ‘Lord, the man you love is ill.’ On receiving the message, Jesus said, ‘This sickness will end not in death but in God’s glory, and through it the Son of God will be glorified.’
  Jesus loved Martha and her sister and Lazarus, yet when he heard that Lazarus was ill he stayed where he was for two more days before saying to the disciples, ‘Let us go to Judaea.’ The disciples said, ‘Rabbi, it is not long since the Jews wanted to stone you; are you going back again?’ Jesus replied:
‘Are there not twelve hours in the day?
A man can walk in the daytime without stumbling
because he has the light of this world to see by;
but if he walks at night he stumbles,
because there is no light to guide him.’
He said that and then added, ‘Our friend Lazarus is resting, I am going to wake him.’ The disciples said to him, ‘Lord, if he is able to rest he is sure to get better.’ The phrase Jesus used referred to the death of Lazarus, but they thought that by ‘rest’ he meant ‘sleep’, so Jesus put it plainly, ‘Lazarus is dead; and for your sake I am glad I was not there because now you will believe. But let us go to him.’ Then Thomas – known as the Twin – said to the other disciples, ‘Let us go too, and die with him.’
  On arriving, Jesus found that Lazarus had been in the tomb for four days already. Bethany is only about two miles from Jerusalem, and many Jews had come to Martha and Mary to sympathise with them over their brother. When Martha heard that Jesus had come she went to meet him. Mary remained sitting in the house. Martha said to Jesus, ‘If you had been here, my brother would not have died, but I know that, even now, whatever you ask of God, he will grant you.’ ‘Your brother’ said Jesus to her ‘will rise again.’ Martha said, ‘I know he will rise again at the resurrection on the last day.’ Jesus said:
‘I am the resurrection and the life.
If anyone believes in me, even though he dies he will live,
and whoever lives and believes in me will never die.
Do you believe this?’
‘Yes, Lord,’ she said ‘I believe that you are the Christ, the Son of God, the one who was to come into this world.’
  When she had said this, she went and called her sister Mary, saying in a low voice, ‘The Master is here and wants to see you.’ Hearing this, Mary got up quickly and went to him. Jesus had not yet come into the village; he was still at the place where Martha had met him. When the Jews who were in the house sympathising with Mary saw her get up so quickly and go out, they followed her, thinking that she was going to the tomb to weep there.
Mary went to Jesus, and as soon as she saw him she threw herself at his feet, saying, ‘Lord, if you had been here, my brother would not have died.’ At the sight of her tears, and those of the Jews who followed her, Jesus said in great distress, with a sigh that came straight from the heart, ‘Where have you put him?’ They said, ‘Lord, come and see.’ Jesus wept; and the Jews said, ‘See how much he loved him!’ But there were some who remarked, ‘He opened the eyes of the blind man, could he not have prevented this man’s death?’ Still sighing, Jesus reached the tomb: it was a cave with a stone to close the opening. Jesus said, ‘Take the stone away.’ Martha said to him, ‘Lord, by now he will smell; this is the fourth day.’ Jesus replied, ‘Have I not told you that if you believe you will see the glory of God?’ So they took away the stone. Then Jesus lifted up his eyes and said:
‘Father, I thank you for hearing my prayer.
I knew indeed that you always hear me,
but I speak for the sake of all these who stand round me,
so that they may believe it was you who sent me.’
When he had said this, he cried in a loud voice, ‘Lazarus, here! Come out!’ The dead man came out, his feet and hands bound with bands of stuff and a cloth round his face. Jesus said to them, ‘Unbind him, let him go free.’
  Many of the Jews who had come to visit Mary and had seen what he did believed in him.

The Word of the Lord

March 22nd : Second Reading A Reading from the letter of St.Paul to the Romans 8:8-11 The Spirit of him who raised Jesus from the dead is living in you

March 22nd : Second Reading 

A Reading from the letter of St.Paul to the Romans 8:8-11 

The Spirit of him who raised Jesus from the dead is living in you

People who are interested only in unspiritual things can never be pleasing to God. Your interests, however, are not in the unspiritual, but in the spiritual, since the Spirit of God has made his home in you. In fact, unless you possessed the Spirit of Christ you would not belong to him. Though your body may be dead it is because of sin, but if Christ is in you then your spirit is life itself because you have been justified; and if the Spirit of him who raised Jesus from the dead is living in you, then he who raised Jesus from the dead will give life to your own mortal bodies through his Spirit living in you.

The Word of the Lord 

Gospel Acclamation Jn11:25, 26

Glory and praise to you, O Christ!

I am the resurrection and the life, says the Lord;
whoever believes in me will never die.
Glory and praise to you, O Christ!

March 22nd : Responsorial PsalmPsalm 130:1–2, 3–4, 5–7a, 7b–8 (R. 7bc)

March 22nd :  Responsorial Psalm

Psalm 130:1–2, 3–4, 5–7a, 7b–8 (R. 7bc)

Response : With the Lord there is mercy, in him is plentiful redemption.

Out of the depths I cry to you, O Lord; Lord, hear my voice! O let your ears be attentive to the sound of my pleadings. 

R.: With the Lord there is mercy, in him is plentiful redemption.

If you, O Lord, should mark iniquities, Lord, who could stand? But with you is found forgiveness, that you may be revered.  

R.: With the Lord there is mercy, in him is plentiful redemption.

I long for you, O Lord, my soul longs for his word. My soul hopes in the Lord more than watchmen for daybreak. More than watchmen for daybreak, let Israel hope for the Lord.  

R.: With the Lord there is mercy, in him is plentiful redemption.

For with the Lord there is mercy, in him is plentiful redemption. It is he who will redeem Israel from all its iniquities. 

R.: With the Lord there is mercy, in him is plentiful redemption.