சனி, 18 ஏப்ரல், 2026
April 19th : Responsorial PsalmPsalm 16:1–2a and 5, 7–8, 9–10, 11 (R. 11a)Response : Lord, you will show me the path of life.
April 19th : First Reading God raised this man Jesus to life, and all of us are witnesses to this.A Reading from the Acts of Apostles 2:14, 22-33
வெள்ளி, 17 ஏப்ரல், 2026
ஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21
ஏப்ரல் 18 : பதிலுரைப் பாடல்திபா 33: 1-2. 4-5. 18-19 (பல்லவி: 22)பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!அல்லது: அல்லேலூயா.
ஏப்ரல் 18 : முதல் வாசகம்நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி நிறைந்தவர்களுமான எழுவரைத் தெரிந்தெடுத்தார்கள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7
April 18th : Gospel They saw Jesus walking on the lakeA Reading from the Holy Gospel according to St.John 6:16-21
April 18th : Responsorial PsalmPsalm 33:1–2, 4–5, 18–19 (R. 22)Response : May your merciful love be upon us, as we hope in you, O Lord.
April 18th : First Reading They elected seven men full of the Holy SpiritA Reading from the Acts of Apostles 6:1-7
வியாழன், 16 ஏப்ரல், 2026
ஏப்ரல் 17 : நற்செய்தி வாசகம் அப்பங்களைப் பகிர்ந்தளித்தார். மக்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15
ஏப்ரல் 17 : நற்செய்தி வாசகம்
அப்பங்களைப் பகிர்ந்தளித்தார். மக்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15
அக்காலத்தில்
இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.
இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்றார்.
இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள்” என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.
இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.