இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 22 செப்டம்பர், 2026

செப்டம்பர் 23 : நற்செய்தி வாசகம் இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல்நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6

 செப்டம்பர் 23 : நற்செய்தி வாசகம்

இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல்நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6

அக்காலத்தில்
இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
அப்போது அவர்களை நோக்கி, “பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 23 : பதிலுரைப் பாடல் திபா 119: 29,72. 89,101. 104,163 (பல்லவி: 105a) பல்லவி: என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!

 செப்டம்பர் 23 : பதிலுரைப் பாடல்

திபா 119: 29,72. 89,101. 104,163 (பல்லவி: 105a)
பல்லவி: என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!

29
பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.
72
நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. - பல்லவி
89
ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது.
101
உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீய வழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன். - பல்லவி
104
உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறுகின்றேன். ஆகவேதான் பொய் வழிகள் அனைத்தையும் நான் வெறுக்கின்றேன்
163
பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்; உமது திருச்சட்டத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளேன். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 1: 15
அல்லேலூயா, அல்லேலூயா!
காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா

செப்டம்பர் 23 : முதல் வாசகம் எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும். நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 30: 5-9

 செப்டம்பர் 23 : முதல் வாசகம்

எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 30: 5-9

கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது; தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாய் இருக்கிறார். அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே; கூட்டினால் நீ பொய்யன் ஆவாய்; அவர் உன்னைக் கடிந்து கொள்வார்.
வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன். மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும். வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச் செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும். எனக்கு எல்லாம் இருந்தால், நான், “உம்மை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்து, “ஆண்டவரைக் கண்டது யார்?” என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.
ஆண்டவரின் அருள்வாக்கு

September 23rd : Gospel A Reading from the Holy Gospel according to St.Luke 9: 1–6

 September 23rd : Gospel

A Reading from the Holy Gospel according to St.Luke 9: 1–6
At that time: Jesus called the twelve together and gave them power and authority over all demons and to cure diseases, and he sent them out to proclaim the kingdom of God and to heal. And he said to them, “Take nothing for your journey, no staff, nor bag, nor bread, nor money; and do not have two tunics. And whatever house you enter, stay there, and from there depart. And wherever they do not receive you, when you leave that town shake off the dust from your feet as a testimony against them.” And they departed and went through the villages, preaching the gospel and healing everywhere.
The Gospel of the Lord.

September 23rd : Responsorial Psalm Psalm 119:29, 72, 89, 101, 104, 163 (R. 105a)

 September 23rd : Responsorial Psalm

Psalm 119:29, 72, 89, 101, 104, 163 (R. 105a)
Response : You word is lamp for my feet, Lord.
Keep me from the way of falsehood; grant me mercy by your law.
R.: You word is lamp for my feet, Lord.
The law from your mouth means more to me than large quantities of silver and gold.
R.: You word is lamp for my feet, Lord.
Forever is your word, O Lord, standing firm in the heavens.
R.: You word is lamp for my feet, Lord.
I keep my feet from every evil path, to obey your word.
R.: You word is lamp for my feet, Lord.
I gain understanding from your precepts, and so I hate all false ways.
R.: You word is lamp for my feet, Lord.
Falsehood I hate and detest, but I love your law.
R.: You word is lamp for my feet, Lord.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. The kingdom of God is at hand; repent, and believe in the Gospel.
R. Alleluia

September 23rd : First Reading A Reading from the book of Proverbs 30: 5–9

 September 23rd : First Reading

A Reading from the book of Proverbs 30: 5–9
Every word of God proves true; he is a shield to those who take refuge in him. Do not add to his words, lest he rebuke you and you be found a liar. Two things I ask of you; deny them not to me before I die: Remove far from me falsehood and lying; give me neither poverty nor riches; feed me with the food that is needful for me, lest I be full and deny you and say, “Who is the Lord?” or lest I be poor and steal and profane the name of my God.
The Word of the Lord.