இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 24 மே, 2024

மே 25 : நற்செய்தி வாசகம்இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்குள் நுழையமாட்டார்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

மே 25  : நற்செய்தி வாசகம்

இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்குள் நுழையமாட்டார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16
அக்காலத்தில்

சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 25 : பதிலுரைப் பாடல்திபா 141: 1-2. 3,8 (பல்லவி: 2a)பல்லவி: தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்கப்படுவதாக!

மே 25  : பதிலுரைப் பாடல்

திபா 141: 1-2. 3,8 (பல்லவி: 2a)

பல்லவி: தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்கப்படுவதாக!
1
ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; விரைவாய் எனக்குத் துணைசெய்யும். உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.
2
தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக் கொள்ளப்படுவதாக! மாலைப் பலி போல் என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக! - பல்லவி

3
ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்; என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும்.
8
ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன; உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்; என் உயிரை அழியவிடாதேயும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! 

தந்தையே, விண்ணுக்கும் 
மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

மே 25 : முதல் வாசகம்நேர்மையாளரின் வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20

மே 25  :  முதல் வாசகம்

நேர்மையாளரின் வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20
உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்துகொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்; மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று. மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது.

என் சகோதரர் சகோதரிகளே, உங்களுள் ஒருவர் உண்மையை விட்டு நெறி தவறி அலையும்போது, வேறொருவர் அவரை மனந்திரும்பச் செய்தால், தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 25th : Gospel It is to such as these little children that the kingdom of God belongsA Reading from the Holy Gospel according to St. Mark 10: 13-16

May 25th  :  Gospel 

It is to such as these little children that the kingdom of God belongs

A Reading from the Holy Gospel according to St. Mark 10: 13-16 
People were bringing little children to Jesus, for him to touch them. The disciples turned them away, but when Jesus saw this he was indignant and said to them, ‘Let the little children come to me; do not stop them; for it is to such as these that the kingdom of God belongs. I tell you solemnly, anyone who does not welcome the kingdom of God like a little child will never enter it.’ Then he put his arms round them, laid his hands on them and gave them his blessing.

The Word of the Lord.

May 25th : Responsorial PsalmPsalm 140(141):1-3,8 Let my prayer come before you like incense, O Lord.

May 25th : Responsorial Psalm

Psalm 140(141):1-3,8 

Let my prayer come before you like incense, O Lord.
I have called to you, Lord; hasten to help me!
  Hear my voice when I cry to you.
Let my prayer arise before you like incense,
  the raising of my hands like an evening oblation.

Let my prayer come before you like incense, O Lord.

Set, O Lord, a guard over my mouth;
  keep watch, O Lord, at the door of my lips!
To you, Lord God, my eyes are turned:
  in you I take refuge; spare my soul!

Let my prayer come before you like incense, O Lord.

Gospel Acclamation Mt11:25

Alleluia, alleluia!

Blessed are you, Father,
Lord of heaven and earth,
for revealing the mysteries of the kingdom
to mere children.
Alleluia!

May 25th : First Reading A good man's heartfelt prayer has great powerA reading from the letter of St.James 5: 13-20

May 25th : First Reading 

A good man's heartfelt prayer has great power

A reading from the letter of St.James 5: 13-20 
If any one of you is in trouble, he should pray; if anyone is feeling happy, he should sing a psalm. If one of you is ill, he should send for the elders of the church, and they must anoint him with oil in the name of the Lord and pray over him. The prayer of faith will save the sick man and the Lord will raise him up again; and if he has committed any sins, he will be forgiven. So confess your sins to one another, and pray for one another, and this will cure you; the heartfelt prayer of a good man works very powerfully. Elijah was a human being like ourselves – he prayed hard for it not to rain, and no rain fell for three-and-a-half years; then he prayed again and the sky gave rain and the earth gave crops.
  My brothers, if one of you strays away from the truth, and another brings him back to it, he may be sure that anyone who can bring back a sinner from the wrong way that he has taken will be saving a soul from death and covering up a great number of sins.

The Word of the Lord.

வியாழன், 23 மே, 2024

மே 24 : நற்செய்தி வாசகம்கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

மே 24  :  நற்செய்தி வாசகம்

கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12
அக்காலத்தில்

இயேசு புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம்போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். பரிசேயர் அவரை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.

பின்னர் வீட்டில் இதைப்பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 24 : பதிலுரைப் பாடல்திபா 103: 1-2. 3-4. 8-9. 11-12 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

மே 24  :  பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 8-9. 11-12 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

8
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். - பல்லவி

11
அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
12
மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 17: 17 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

மே 24 : முதல் வாசகம்இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்.திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 9-12

மே 24  :  முதல் வாசகம்

இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 9-12
சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்று கொண்டிருக்கிறார்.

அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள். தளரா மனமுடையோர் பேறுபெற்றோர் என்கிறோம். யோபுவின் தளரா மனத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் என்ன செய்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனெனில், ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, என் சகோதரர் சகோதரிகளே, நீங்கள் ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின்மீதும் மண்ணுலகின்மீதும் வேறு எதன்மீதும் ஆணையிடாதீர்கள். நீங்கள் ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 24th : Gospel What God has united, man must not divideA Reading from the Holy Gospel according to St.Mark 10: 1-12

May 24th :  Gospel 

What God has united, man must not divide

A Reading from the Holy Gospel according to St.Mark 10: 1-12 
Jesus came to the district of Judaea and the far side of the Jordan. And again crowds gathered round him, and again he taught them, as his custom was. Some Pharisees approached him and asked, ‘Is it against the law for a man to divorce his wife?’ They were testing him. He answered them, ‘What did Moses command you?’ ‘Moses allowed us’ they said ‘to draw up a writ of dismissal and so to divorce.’ Then Jesus said to them, ‘It was because you were so unteachable that he wrote this commandment for you. But from the beginning of creation God made them male and female. This is why a man must leave father and mother, and the two become one body. They are no longer two, therefore, but one body. So then, what God has united, man must not divide.’ Back in the house the disciples questioned him again about this, and he said to them, ‘The man who divorces his wife and marries another is guilty of adultery against her. And if a woman divorces her husband and marries another she is guilty of adultery too.’

The Word of the Lord.