September 10th : Gospel
புதன், 9 செப்டம்பர், 2026
September 10th : Gospel A Reading from the Holy Gospel according to St.Luke 6: 27–38
September 10th : Responsorial Psalm Psalm 139:1–3, 13–14ab, 23–24 (R. 24b) Response : Lead me, Lord, in the way everlasting.
September 10th : Responsorial Psalm
September 10th : First Reading A Reading from the first letter of St.Paul to the Corinthians 8: 1b–7, 11–13
September 10th : First Reading
செப்டம்பர் 10 : நற்செய்தி வாசகம் உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38
செப்டம்பர் 10 : நற்செய்தி வாசகம்
செப்டம்பர் 10 : பதிலுரைப் பாடல் திபா 139: 1-3. 13-14. 23-24 (பல்லவி: 24b) பல்லவி: ஆண்டவரே, என்றும் உள்ள வழியில் என்னை நடத்தியருளும்.
செப்டம்பர் 10 : பதிலுரைப் பாடல்
செப்டம்பர் 10 : முதல் வாசகம் நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1b-7, 11-13
செப்டம்பர் 10 : முதல் வாசகம்
செவ்வாய், 8 செப்டம்பர், 2026
September 9th : GospelA Reading from the Holy Gospel according to St.Luke 6: 20–26
September 9th : Responsorial PsalmPsalm 45:11–12, 14–15, 16–17 (R. 11a)Response : Listen, O daughter; pay heed and give ear.
September 9th : First ReadingA Reading from the first letter of St.Paul to the Corinthians 7: 25–31
நற்செய்தி வாசகம் ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26
நற்செய்தி வாசகம்
ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26
அக்காலத்தில்
இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.
மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர்.
ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.