Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, November 18, 2020

*பதிலுரைப் பாடல்*திபா 149: 1-2. 3-4. 5-6,9 _பல்லவி: ஆட்சியுரிமை பெற்ற குருக்களாய் கடவுளுக்காக ஏற்படுத்தினீர்._

*பதிலுரைப் பாடல்*

திபா 149: 1-2. 3-4. 5-6,9 

_பல்லவி: ஆட்சியுரிமை பெற்ற குருக்களாய் கடவுளுக்காக ஏற்படுத்தினீர்._
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்;
அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக!
சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! -பல்லவி


3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக;
மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்;
தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். -பல்லவி


5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக!
மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக!
6 அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்.
9 இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. -பல்லவி 

____________


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

*அல்லேலூயா,* அல்லேலூயா! உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

No comments:

Post a Comment