Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, December 4, 2020

பதிலுரைப் பாடல்*_பல்லவி: ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர். _ *திபா 147: 1-2. 3-4. 5-6*

*🌿பதிலுரைப் பாடல்*


_பல்லவி: ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர். _ 

*திபா 147: 1-2. 3-4. 5-6* 
1 நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது;
அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது.
2 ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்;
நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். -பல்லவி 

3 உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்;
அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.
4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி,
அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். -பல்லவி 

5 நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்;
அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது.
6 ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்;
பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். -பல்லவி 

______ 

*🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி* 

_அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்; ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்; ஆண்டவரே நமக்கு வேந்தர்; அவரே நமக்கு மீட்பு அளிப்பவர். அல்லேலூயா._

No comments:

Post a Comment