Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, October 1, 2023

அக்டோபர் 2 : தூய காவல் தூதர்கள் நினைவுமுதல் வாசகம்என் தூதர் உனக்கு முன் செல்வார்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 23: 20-23a

அக்டோபர் 2 :  தூய காவல் தூதர்கள் நினைவு

முதல் வாசகம்

என் தூதர் உனக்கு முன் செல்வார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 23: 20-23a
ஆண்டவர் கூறுவது:

வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன். அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக் கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது. நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன். ஏனெனில், என் தூதர் உனக்கு முன் செல்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment