Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, November 30, 2023

டிசம்பர் 1 : பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 52. 53-54. 55-56. 57-58 (பல்லவி: 52b)பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்

டிசம்பர் 1 :  பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 52. 53-54. 55-56. 57-58 (பல்லவி: 52b)

பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
52
மலைகளே, குன்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

53
நிலத்தில் தளிர்ப்பவையே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
54
கடல்களே, ஆறுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

55
நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
56
திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

57
வானத்துப் பறவைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
58
காட்டு விலங்குகளே, கால் நடைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 28
அல்லேலூயா, அல்லேலூயா! 

நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

No comments:

Post a Comment