பிப்ரவரி 16 : பதிலுரைப் பாடல்
திபா 15: 2-3a. 3bc-4ab. 4cd,5 (பல்லவி: 1b)
பல்லவி: ஆண்டவரே, உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?
2
மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்;
3a
தம் நாவினால் புறங்கூறார். - பல்லவி
3bc
தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4ab
நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். - பல்லவி
4cd
தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்.
5
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபே 1: 17-19 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா!
இறைவன் நம்மை அழைத்ததால் எத்தகைய எதிர்நோக்கு ஏற்பட்டுள்ளது என்று நாம் அறிந்துகொள்ளும்படி, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தை நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக! அல்லேலூயா.
No comments:
Post a Comment